World

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்(77) உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனத்தின் உயிர் பிரிந்தது. சுவாசக் கோளாறு காரணமாக 9-ம் தேதி முதல் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானமாக இருந்து வந்தார் மதுரை ஆதீனம். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அருணகிரிநாதர் காலமானார். தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான சைவ திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.

மதுரை ஆதீனத்திற்குரிய 3 கோயில்கள் தஞ்சாவூர், திருவாரூரில் உள்ளன. சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம். தமிழ் தொண்டு, ஆன்மீக தொண்டு மற்றும் சமூகப் பணிகளில் மதுரை ஆதீனம் ஈடுபட்டு வந்தார். தான் சரி என்று நினைக்கக்கூடிய அரசியல், சமூக கருத்துகளையும் முன்வைத்தவர் மதுரை ஆதீனம்.
 …

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading