Local

21 ஆம் திகதி கறுப்பு கொடிகளை ஏற்றி கடைகளை மூடுமாறு கர்தினால் கோரிக்கை!

எதிர்வரும் 21ம் திகதி கறுப்பு கொடிகளை ஏற்றுமாறு கத்தோலிக்கர்களிடம் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டைகை கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு அதிகாரிகள் நீதி வழங்காமையை எதிர்த்து இவ்வாறு கறுப்பு கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

வாகனங்கள் மற்றும் கடைகளிலும் கறுப்பு கொடிகளை பறக்கவிடுமாறு கர்தினால் கோரியுள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதி கடைகளை மூடுமாறும் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடை அரசியல் தலைமைகளுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான இணக்கபாடுகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகத்தினால் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading