Local

மது போதையில் வாகனம் செலுத்துவதை தடுக்க இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

சாரதிகள் மது போதையில் வாகனம் செலுத்துவதை தடுப்பதற்கான புதிய NEXA தொழில்நுட்பத்தினை உயர்தர மாணவன் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

குறித்த மாணவன் உயர் தரத்தில் பயிலும் எஸ் தினிப்ஷான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை பாரதி மகா வித்தியாலயத்தில் 13ஆம் தர வர்த்தக பிரிவில் கல்வி பயிலும் குறித்த மாணவன் 2026 ஆம் ஆண்டுக்கான வணிக மற்றும் முயற்சியாண்மை திறன் மதிப்பீட்டு போட்டியில் இந்த புதிய கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார்.

வீதி விபத்துக்களைக் குறைத்து சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் NEXA எனும் நவீன Smart Alcohol Detection and Vehicle Safety System உருவாக்கப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்துவதை தடுக்க மாணவனின் புதிய கண்டுபிடிப்பு | Student S New Invention To Prevent Drunk Driving

ESP32 அல்லது ESP8266 மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் Alcohol Sensor மூலம் இயங்கும் இவ்வமைப்பு, சாரதியின் சுவாசத்தில் உள்ள மதுசாரத்தின் அளவைக் கண்டறிந்து தகவல்களை Android செயலிக்கு அனுப்புகிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக உருவாக்கப்பட்டுள்ள Android Software மூலம் மதுசாரத்தின் அளவை நேரடியாகக் கண்காணிக்க முடியும்.

குறிப்பாக, கண்டறியப்பட்ட மதுசாரத்தின் அளவை செயலியில் காண்பிப்பதுடன், ஆபத்தான அளவு கண்டறியப்படும்போது உடனடி எச்சரிக்கையையும் வழங்குகின்றது.

மேலும், குறுந்தகவல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

சாதாரண நிலை பச்சை நிறத்திலும், ஆபத்தான நிலை சிவப்பு நிறத்திலும் காட்டப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த போட்டியில் தேசிய மட்டத்தில் எஸ் தினிப்ஷான் மூன்றாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading