World

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்ய டிரம்ப் அனுமதி!!

இஸ்ரேல், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு நட்பு நாடுகளுக்கு உடனடியாகப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய அவசரநிலை நிலவுவதை கணக்கில் கொண்டு, இந்த விற்பனைக்கான நாடாளுமன்ற ஆய்வுகளுக்கு விலக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, கத்தாருக்கு 4.01 பில்லியன் டாலர் மதிப்பிலான பேட்ரியாட் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட துல்லியமாக அழிக்கும் ஆயுத அமைப்புகள் (APKWS) ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், குவைத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒருங்கிணைந்த போர் கட்டளை அமைப்பு மற்றும் இஸ்ரேலுக்கு 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட துல்லியமாக அழிக்கும் ஆயுத அமைப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 147.6 மில்லியன் டாலருக்கு APKWS அமைப்பை விற்பனை செய்யவும் ஒப்புதல் அளித்தது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading