இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு!!
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிரவரும் 12-ம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அழைப்பாணை விடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 மற்றும் 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களை கொள்வனவு செய்த நடவடிக்கையுடன் தொடர்புபட்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபரான கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.