World

மனைவிகளுக்குள் மோதல்! பிரியும் இளவரசர்கள்!!

மனைவிகளுக்குள் ஒத்துபோகாததால், இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹாரி ஆகிய இருவரும் தங்களது மனைவிகளுடன் கென்சிங்டன் அரண்மனையில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

ஹாரியின் மனைவி மேகன் மார்க்கெல் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் திருமணம் முடிந்து மேகன் மார்க்கெல், கென்சிங்டன் அரண்மனைக்கு வந்ததில் இருந்தே அவருக்கும் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுக்கும் ஒத்துப்போகவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக 10 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த வில்லியமும், ஹாரியும் இனி தனித்தனியாக வாழ முடிவு செய்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாரி-மேகன் ஜோடிக்கு குழந்தை பிறக்கும் முன்பாகவே அவர்கள் பிராக்மோர் காட்டேஜ் அரண்மனையில் குடியேறுவார்கள் என தெரிகிறது.

அடுத்த சில வாரங்களில் இந்த பிரிவு, முறைப்படி நடக்க இருப்பதாக அங்கு வெளியாகும் பத்திரிகைகளில் தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அறக்கட்டளை மற்றும் அரசவை பணிகளை மேற்கொள்ள வில்லியம் மற்றும் ஹாரிக்கு தனித்தனி ஊழியர்களை நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading