Local

மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவியின் கழுத்த நெரித்து அவரை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ளார்.

சம்பவம் இன்று 15 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகழடித்தீவு காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவதினமான இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு தனது 20 வயதான மனைவியின கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

தனது 2 அரை வயது குழந்தையை தூக்கி கொண்டு தனது சகோதரியின் வீட்டிற்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் பிற்பகல் 12 மணியளவில் கணவன் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading