World

15ஆயிரம் ஆடுகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

சூடானில் கடல் பயணத்தின் போது கப்பல் கவிழ்ந்ததில் 15,000 ஆடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.

சூடான் நாட்டின் சுவாகின் துறைமுகத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு கப்பலில் 15,800 ஆடுகள் கொண்டு செல்லபட இருந்தன.

இந்நிலையில், கப்பல் செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது அதிக எடை காரணமாக திடீரென ஒருபக்கமாக கவிழ்ந்தது.

எதிர்பாராத இந்த விபத்தில் கப்பலிலிருந்த ஆடுகளில் 15,000 ஆடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. நீண்ட நேர மீட்புப் பணியில் 780 ஆடுகள் மீட்கப்பட்டன.

9,000 ஆடுகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் கப்பலில் 15,800 ஆடுகளை ஏற்றியதே விபத்திற்குக் காரணம என கடற்கரை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading