Local

மஹிந்தவின் வீட்டை தனக்கு வழங்குமாறு கோட்டா கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசிக்கும் ஹெக்டர் கொப்பேகடுவ வீதியில் அமைந்துள்ள வீட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு கோரிக்கை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கோரிக்கை கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வந்த விஜேராம இல்லத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்தவுடன் அவர் அங்கு செல்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் ஹெக்டர் கொப்பேகடுவ வீதியில் அமைந்துள்ள வீட்டை தனக்கு வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading