Local

மஹிந்த அணியின் ‘பட்ஜட்’ தோற்கடிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள சீதாவாக்கபுர நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சீதாவாக்கபுர நகர சபையில், பொதுஜன முன்னணிக்கு 11 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும், ஜே.வி.பிக்கு ஒரு ஆசனமும் உள்ளது.

இங்கு ஆட்சியமைத்துள்ள பொதுஜன முன்னணியின் சார்பில் நியமிக்கப்பட்ட நகர சபைத் தலைவர் ரணவீர நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் 12 பேர் எதிராகவும் வாக்களித்து வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடித்தனர்.

கொழும்பு அரசியல் குழப்பங்கள் தற்போது உள்ளூராட்சி சபைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading