Cinema

மாணவிக்கு பாலியல் தொல்லை இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்குப்பதிவு!

இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இவர் முதல்வன், இந்தியன், சிவாஜி, எந்திரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் விளையாடி வரும் மதுரை பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் தாமோதரனின் மகன் தான் ரோஹித் ஆவார்.

இவர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் உள்ளார். இந்த நிலையில் ரோஹித் மீது புதுச்சேரி பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஷங்கரின் மருமகன் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading