Local

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சாரக் கட்டணம் அறவிடப்படமாட்டாது!

இந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சாரக் கட்டணம் அறவிடப்படமாட்டாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் குறித்த இரண்டு மாதங்களுக்குமான கட்டங்கள் செலுத்தப்பட்டிருந்தால், அந்தத் தொகையை அவர்களுக்கே மீள வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று (02) இரவு மத்திய கொழும்பில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் இலக்கம் 16ல் பேட்டியிடும் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading