Uncategorized

மிகவும் பழமையான பைபிள் ஏலத்தில்!

ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததாக நம்பப்படும் கோடெக்ஸ் சாஸூன், ஏலத்திற்கு வரவுள்ளது.

இது சோதேபியால்  இலங்கை  நாணயத்தில்1000 கோடி ரூபா முதல் 1500 கோடி  ரூபாவிற்கு  விற்பனையாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் மே மாதம் ஏலத்திற்கு வரவுள்ளது,  கிட்டத்தட்ட முழுமையான எபிரேய பைபிளில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது.

சுமார் 1,100ஆண்டுகளுக்கு முன்பு,  இன்றைய இஸ்ரேல் அல்லது சிரியாவில் எழுத்தாளர் ஒருவரினால் ஏறக்குறைய 400பெரிய காகிதத் தாள்களில் நகலெடுக்கப்பட்டது,சுமார் 12 கிலோகிராம்எடையுள்ள 12 x 14அங்குலங்கள் பழுப்பு (brown ) தோல் பிணைப்பில் அமைந்துள்ளது.  இது ஹீப்ரு பைபிளின் முழு உரையையும் கொண்டிருந்தது, இன்று எந்த ஜெப ஆலயத்திலும் உள்ள தோரா சுருள்களைப் போன்ற சதுர எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்த பைபில் பல முறை கை மாறிய பிறகு,  அது வடகிழக்கு சிரியாவில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தில் வந்தடைந்துள்ளது. இந்த பைபில்13அல்லது 14ஆம் நூற்றாண்டிலிருந்து கிட்டத்தட்ட 600ஆண்டுகளுக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

1929இல் மீண்டும் தோன்றியதிலிருந்து,கடந்த வாரம் மன்ஹாட்டனில் உள்ள சோதேபியில் ஏல மையத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மே மாதம் ஏலம் விடப்படும் இந்த புத்தகம் 1000கோடி ரூபா முதல் 1500 கோடி ரூபா  வரை மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading