World

மீண்டும் தாக்கினால்.. பதிவு தாக்குதல் கொடூரமாக இருக்கும் ஈரான் மிரட்டல்!!

ஈரான் மீது மீண்டும் ஏதேனும் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், போரின் எல்லைகள் மத்திய கிழக்கையும் தாண்டி உலகளவில் விரிவடையும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களுக்கு எதிரான கூட்டுப் படைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஈரான் தனது உண்மையான மூலோபாயப் பலத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை என இன்று (20) வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இராணுவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாங்கள் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடுபவர்கள் அல்ல, “போர்க்கள மனிதர்கள்” என்பதை நிரூபிப்போம் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் பாதுகாப்புப் படை, அடுத்த அத்துமீறலின் போது கற்பனை செய்ய முடியாத இடங்களில் பேரழிவுகரமான பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என மிகக் கடுமையான வார்த்தைகளில் எச்சரித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading