World

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டொலர்களை நெருங்குகிறது!

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த வாரத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, விரைவில் 100 பில்லியன் டொலர்களை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

முகேஷ் அம்பானி தற்போது உலகின் 12 வது பணக்காரர் ஆவார். இரண்டாவது கொரோனா அலைக்குப் பிறகு சில்லறை மற்றும் எரிசக்தி வணிகத்தில் ஏற்பட்ட மீள் ஏற்றம் காரணமாக ரிலையன்ஸ் குழும பங்குகள் பங்குச் சந்தையில் உயர்ந்து வருகின்றன. இந்த வாரம் அவரது சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் ரிலையன்ஸ் பங்கு சுமார் 18 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading