Cinema

முடிவுக்கு வந்தது வடிவேலுவின் 23ஆம் புலிகேசி Part 2

சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிப்பில் 23-ஆம் புலிகேசி பார்ட்-2 திரைப்படத்துக்கு பூஜை போடப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆனால், வடிவேலு படம் எடுக்க ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார். 

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வடிவேலுக்கு ரெட் கார்டு போடப்பட்டதால், இவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை. 

இந்த நிலையில், பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த 23ஆம் புலிகேசி பார்ட்-2 பட விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வடிவேலு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து பேசி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading