World

கார் இருக்கைக்கு அடியில் பதுங்கி தப்பித்த ஆப்கான் பெண் மேயர்!

தாலிபான்களால் தனது உயிருக்கு ஆபத்து எனத் தெரிவித்திருந்த நிலையில்  ஆப்கான் மேயர் கார் இருக்கைக்கு அடியில் பதுங்கி தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கான் முழுவதும் தற்போது தாலிபான்கள் கைகளுக்கு வந்துள்ள நிலையில், ஆப்கான் அதிபர் உட்பட அனைவரும் வெளி நாடுகளுக்குச் சாரை சாரையாக வெளியேறினார்.

இந்நிலையில் ஆப்கானைச் சேர்ந்த முதல் பெண் மேயர், ஸரிஃபா கஃபாரி. தாலிபான்களால் தனது உயிருக்கு ஆபத்து எனத் தெரிவித்திருந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிலிருந்து காரில் பதுங்கியபடி காபூல் விமான நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து துருக்கி அதிகாரிகளின் உதவியுடன் விமானத்தில் ஏறி இஸ்தான்புல் வழியாக ஜெர்மனிக்கு சென்று தப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading