முதியவரின் வித்தியாசமான கடைசி ஆசை நிறைவேறிய 2 மணி நேரத்தில் பிரிந்த உயிர்!

மரண படுக்கையில் இருந்த 61 வயது முதியவர் வித்தியாசமான தனது கடைசி ஆசை ஒன்றை தெரிவித்தார்.
அது நிறைவேறிய 2 மணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
மோட்டார் சை க்கிள்கள் மீது தீராக்காதலுடன் இருப்பவர்கள் நம்மில் ஏராளம்.
18 வயது இளைஞர்கள் ஆகட்டும் அல்லது 60 வ யதை கடந்த முதியவர்கள் ஆகட்டும்,மோட்டார் சைக்கிள்கள் மீதான அந்த காதல் மட்டும் எப்போதும் மாறவே மாறாது.
61வயதான ஜான் ஸ்டேன்லியும் கூட அப்படிப்பட்டவர் தான்.
இளம் வயது முதலே மோட்டார் சைக்கிள்கள் என்றால் ஜான் ஸ்டேன்லிக்கு அவ்வளவு பிடிக்கும்.
அதிலும் குறிப்பாக இன் றைய இளைஞர்களின் கனவாக இருந்து வரும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது ஜான் ஸ்டேன்லி அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஆனால், ஜான்ஸ் டேன்லியை புற்று நோய் வாட்டி வதை த்தது.
சுவாச கருவிகளின் உதவியுடன் தான் அவர் சுவாசித்து வந்தார். அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், ஜான் ஸ்டேன்லியால் நடக்க கூட முடியாது.
அவர் படுத்த படுக்கையாக தான் கிடந்தார்.
ஆனால், அவரது ஆழ் மனதிற்குள் கடைசி ஆசை ஒன்று இருந்தது.
தான் உயிருக்கு உயிராக நேசித்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களின் கர்ஜனையை, உயிரிழப்ப தற்குள் மீண்டும் ஒரு முறையாவது கேட்கவேண்டும் என்பது தான் அந்த ஆசை.
ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசையை அவரது உறவின ர்கள் புரிந்து கொண்டனர்.
எனவே ஜான் ஸ்டேன்லியின் நெருங்கிய உறவினரான மைக்கேல் ஸ்மித் உடனடியாக செயலில் இறங்கினார்.
இதன் ஒரு பகுதியாக பைக் ஆர்வலரான டேவிட் தாம்ப்சன் என்பவரை மை க்கேல் ஸ்மித் தொடர்பு கொண்டார்.
அவரிடம் ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசையை தெரிவித்தார். உடனே பேஸ்புக்கில் டேவிட் தாம்சன் போஸ்ட் ஒன்றை வெளி யிட்டார்.
அதில் ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆ சை குறித்த அவர் உருக்கமாக விவரித்திருந்தார்.
அத்துடன் பு ற்று நோயால் துன்பப்படும் அந்த முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற விரும்பும் பைக் ஆர்வலர்கள் அனைவரும் ஜான் ஸ்டேன்லியின் வீடு முன்பு ஒன்று திரள வேண்டும் என்ற கோரிக்கையை யும் டேவிட் தாம்சன் வைத்தார்.
மனதை உருக்கும் டேவிட் தாம்சனின் இந்த பேஸ்புக் போஸ்ட் உடனடி யாக வைரல் ஆனது.
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பைக் ஆர்வலர்கள் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுடன் ஜான் ஸ்டேன்லியின் வீடு முன்பு திரண்டு விட்டனர்.
இவர்க ளில் சிலர் நெடுந்தொ லைவு கடந்து ஜான் ஸ்டேன்லியின் வீட்டை அடைந்திருந்தனர்.
டேவிட் தாம்சனின் பேஸ்புக் பதிவை பார்த்ததும், சற்றும் யோசிக்காமல் ஜான் ஸ்டேன்லியின் வீடு நோ க்கி அவர்கள் கிளம்பி வந்து விட்டனர்.
இதன் பின் அவர்கள் அனைவரும் இன்ஜினை ஸ்டார்ட் செய்து பைக்கை முறுக்க,
அந்த சப்த த்தை கேட்டு ஜான் ஸ்டேன்லி மகிழ்ந்து போனார்.
அந்த நேர த்தில் ஹார்லி டேவிட்சன் மோட்டா ர் சைக்கி ள்களின் கர்ஜ னையை இன்னும் நன்றாக கேட்க ஏதுவாக, ஜான் ஸ்டே ன்லியின் உறவினர்கள் அவரை வீட் டிற்கு வெளியே தூக்கி வந்து அமர வைத்தனர்.
அப்போது பைக் ஆர்வலர்களை நோக்கி கையை அசை த்து தனது ம கிழ்ச்சியை வெளிக்கா ட்டினார் ஜான் ஸ்டேன்லி.
இதனால் பைக் ஆர்வலர்கள் அனைவரும் எமோஷனல் ஆனார்கள்.
அதனை வார்த்தைகளால் விவரிக்க இய லாது. இதன் பின் 2 மணி நேரம் தான் கட ந்திரு க்கும்.
தனது க டைசி ஆசை நிறைவே றிய மகிழ்ச்சியுடன் இவ்வுலகை விட்டு பி ரி ந்தார் .
மேலும், மனைவியின் கரங்களை பற்றியிருந்த சமயத்தில் ஜான் ஸ்டேன்லியின் உயிர் பிரிந்தது.
இது குறித்து ஜான் ஸ்டேன்லியின் மனைவி கூ றுகையில் தான் விரும்பிய சப்தத்தை அவர் கடை சியாக கேட்டு விட்டார் என்றார்.
