World

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா அல்லாத தொற்றுநோய் பாதிப்பால், கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் பில் கிளிண்டன் சிகிச்சை பெற்று வருவதாக, அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவர்கள் தெரிவிக்கையில், “இரண்டு நாள்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என நம்பலாம்” எனக்குறிப்பிட்டுள்ளனர். தற்போது 75 வயதாகும் பில் கிளிண்டன், 2004 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் இதய சிகிச்சை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading