Local

யாழ்.மிருசுவில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்றிரவு(03) 7.30 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்ததால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading