Local

யுத்தத்தை முடித்தவர்கள் ரணிலும் கருணாவும்தான் கைப்பற்றிய தங்கங்கள் எங்கே?

2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடித்தவர்கள் ரணிலும், கருணாவுமே என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாமே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததாக சிங்கள மக்களை ராஜபக்சர்கள் ஏமாற்றி வருவதாகவும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் 20ஆவது நாளாகவும் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட போதே குறித்த நபர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அன்புக்குரிய சிங்கள சகோதரர்களே, ராஜபக்சர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடித்ததாக இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.

நான் இருப்பது ஹப்புத்தளையில். யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து ஹப்புத்தளைக்கு வந்துவிட்டேன்.

முடிந்தால் வரச்சொல்லுங்கள். நான் பயமில்லை. யுத்தத்தை முடித்தவர்கள் ரணிலும், கருணாவுமே.

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் எங்கே எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading