Local

ரணில் ராஜபக்ஸக்களை விட மிக ஆபத்தானவர்

ரணில், ராஜபக்ஸக்களை விட மிக ஆபத்தானவர் என்றும் அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் மக்கள் போராட்டங்களினால் ஏற்பட்ட மாற்றத்தினால் நாட்டின் ஜனாதிபதியான ரணில், தற்பொழுது மக்களை கைது செய்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading