Local

ரமழான் மாதத்தில் கடமை உணர்வோடு வேலை செய்யும் பெண்

தொற்றுநோய் காலம்னு குழந்தை பிறக்குறத யாரும் நிற்பாட்ட முடியாது. ஒவ்வொரு நாளும் தாய்மார் டெலிவரிக்கு வாராங்க. முன்ன விடவும் இப்ப எல்லாருமே அரசாங்க ஹொஸ்பிட்டலுக்கு வர்றதால எங்க வேலை கூடியிருக்கு. நான் தொடர்ந்து வேலை செய்றேன், தொடர்ந்து வேலை செய்வேன், ஏனென்றால் இது என்னோட கடமை. நான் மெடிசின் படிக்க முடிவு செஞ்ச நேரமே இந்த பொறுப்பை ஏற்றுக்கிட்டேன். என் சமூகத்துக்கு நான் சேவை செய்யனும். இந்த வார்ட்டுக்கு வரும் ஒவ்வொரு தாய்க்கும் நான் சேவை செய்யனும்.                                                நான் கடமையுணர்வோட அவங்களை கவனிக்குறேன். அதனால சுஹருக்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகவே எழும்பி, டெலிவரிக்கு தாய்மாரை தயார் பண்ணுறதோட, ஒரு மணித்தியாலம் லேட்டா இஃப்தார் பண்றேன்.              என் ரவுன்ட்ஸ் எல்லாத்தையும் முடிக்கிறதுதான் எனக்கு முக்கியம். 

வழமையா குடும்பத்துக்கு ரமஸான் ஒரு ஸ்பெஷல் டைம். இந்த வருஷம் எல்லாமே மாறிடுச்சு. கடைசியா என் குடும்பத்தை பார்த்தப்போ, அவங்களை கட்டி அணைக்ககூட என்னால முடியல. அவங்க என்னைப் பற்றி கவலையாவே இருக்காங்க. ஒவ்வொரு முறை நியூஸ் பார்க்கும்போதும் நான் பத்திரமா இருக்கேனான்னு பார்க்க கோல் பண்ணுவாங்க. அவங்களை தைரியப்படுத்திட்டு நான் சொல்வேன்- நான் இப்ப எங்க அவசியம் இருக்கனுமோ அங்கதான் இருக்கேன்.
– இல்மா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading