Uncategorized

ரஷ்ய வீரர்கள் பலாத்காரத்தை போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

ரஷ்யா உக்ரைனில் பலாத்காரத்தை போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக உக்ரைன் முதல் பெண்மணி குற்றம்சாட்டினார்.

171 பாலியல் வன்முறை வழக்குகள்
உக்ரைனில் ஒரு வருடத்தைக் கடந்து நடந்துவரும் போரில், ரஷ்ய துருப்புக்கள் செய்த 171 பாலியல் வன்முறை வழக்குகளை அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரித்து வருவதாக உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா (Olena Zelenska) சனிக்கிழமை (மார்ச் 4) தெரிவித்தார்.

பாலியல் வன்முறை மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய குழு விவாதத்தில் உரையாற்றிய ஒலேனா ஜெலென்ஸ்கா, மேற்கூறிய புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட அதிகாரப்பூர்வமானவை என்றும், “ஆனால், இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் வெளிப்படையாக சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.

குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்னவென்று தெரியாத அவலநிலை இருப்பதாக கூறினார்.

39 ஆண்கள், 13 சிறார்கள்
விசாரிக்கப்பட்டுவரும் இந்த 171 பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 39 ஆண்கள், 12 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உள்ளனர். இவர்கள் வலிமையுடன் வெளியே சொன்னதால் மட்டுமே இவர்களைப் பற்றி தெரிவந்தது என அவர் கூறினார்.

“ரஷ்யாவின் இந்த கற்பழிப்பு மற்றும் பிற போர்க்குற்றங்களுக்கான தீர்ப்புகள் ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். இதன் மூலம், உலகில் உள்ள எந்தவொரு ஆக்கிரமிப்பாளரும், கூட்டுப் பலாத்காரம் செய்பவர்களும் இதுபோன்ற விடயங்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்பதை அறிவார்கள்” என்று ஜெலென்ஸ்கா தெரிவித்தார்.

மேலும், ரஷ்யா உக்ரைனில் கற்பழிப்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கா குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு நவம்பரில், ரஷ்ய ராணுவ வீரர்களின் மனைவிகள் உக்ரேனிய பெண்களை கற்பழிக்க ஊக்குவித்ததையும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading