Local

ராஜபக்ச குடும்பத்தின் மூவருக்கு எதிராக ஒரே நாளில் வழக்கு விசாரணை

மகிந்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு எதிராக ஒரே நாளில் வழக்கு விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச , மகன்களான நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று ஊழல் வழக்குகள் இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இந்த மூன்று வழக்குகளும் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாயை ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் வைப்பு செய்து முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்டுள்ள ‘கிரிஷ்’ வழக்கு அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

நாமல் ராஜபக்ச கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி முதலும், ஷிரந்தி ராஜபக்ச கடந்த 7ஆம் திகதி முதலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபராக உள்ள நாமல் ராஜபக்சவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் செப்டம்பர் 30 அன்று பிணை வழங்கியது.

ராஜபக்ச குடும்பத்தின் மூவருக்கு எதிராக ஒரே நாளில் வழக்கு விசாரணை | Rajapakshe Families 3 Members Cases Will Be Taken

எனினும், இச்சம்பவம் தொடர்பாகப் புதுக்கடை நீதிவான் முன்னிலையில் உள்ள வழக்கில் அவரது பிணை கோரிக்கை தொடர்பான பரிசீலனை இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மற்றொரு வழக்கில் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தகுந்த கல்வித் தகுதியின்றி கடற்படை நிறைவேற்று அதிகார விசேட அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டு, பிரித்தானியாவின் பயற்சி நெறியில் பங்கேற்றதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (13) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பிணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ச தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading