ராணுவத்தில் சீன ட்ரோன்களுக்கு இனி இடமில்லை
Germany’s military will no longer use Chinese-made drones, a defence ministry spokesperson said: ஜேர்மன் ராணுவத்தில் இனி சீன ட்ரோன்கள் பயன்படுத்தப்படாது என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் சீன ட்ரோன்களை பயன்படுத்துவதை நிறுத்துவது என ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும், அவை சீன அரசுக்கு முக்கிய தகவல்களை அனுப்பப் பயன்படுத்தப்படலாம் என்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவங்கள் பல எண்ணத் துவங்கியுள்ளன.

இந்நிலையில், ஜேர்மனியின் ராணுவத்தில் இனி சீன ட்ரோன்கள் பயன்படுத்தப்படாது என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பயிற்சி நோக்கங்களுக்காக, செலவு குறைந்த ஒரு தேர்வாக சீன உற்பத்தியாளர்களின் ட்ரோன்கள் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இனி சீன ட்ரோன்களுக்கு பதிலாக ஐரோப்பிய தயாரிப்புகள் பயன்படுத்தப்படும்.
ஜேர்மன் ராணுவத்தின் தன்னிறைவையும் தொழில்நுட்ப இறையாண்மையையும் வலுப்படுத்தும் நோக்கில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் இனி பயன்படுத்தப்படாது என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அதே நேரத்தில், குறிப்பிட்ட நாடுகளின் தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை எதுவும் இல்லை என்றும், ராணுவப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பாதுகாப்பைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட தனிப்பட்ட அபாய மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.