லசித் மலிங்க பாணியில் பந்து வீசும் சிறுவன் பற்றிய தகவல் வழங்குமாறு கோரிக்கை!
சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க பாணியில் பந்து வீசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவ முடியுமா என தனது முகநூல் பதிவொன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் இந்த சிறுவனுக்கு சிறந்த ஒரு எதிர்காலம் இருப்பதாகவும் இவரைப் பற்றி யாருக்கும் தகவல் தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்துமாறும் கூறியுள்ளார்.
