Local

வடக்கின் ஒரு பகுதி முற்றாக முடங்கியது!

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய , கேகாலை, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட செம்மாலி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீனவர் பகுதி

கேகாலை மாவட்டத்தின் கேகாலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம்

மேலும்,அம்பாறை மாவட்டத்தின் கல்முனை காவல்துறை அதிகாரப்பிரிவின் மருதமுனை கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading