Technology

உடல் எடையை குறைக்க வாய்க்கு பூட்டு போடும் கருவி கண்டுபிடிப்பு!

வாயை கட்டினாலே உடல் எடையை ஈஸியாக குறைத்து விடலாம் என்று பலரும் கூறுவர். இந்த சொல்லை நிஜமாக்கும் வகையில் நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று வாய்க்கு பூட்டு போடும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் இஷ்டத்திற்கு உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட்டுவிட்டு, உடல் எடை அதிகரித்த பிறகு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்காகவே பிரத்தியேகமாக நியூசிலாந்து விஞ்ஞானிகள் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

நியூசிலாந்தின் OTAGA பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உடல் எடை குறைப்புக்கான புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கும் வகையில் மேல்கீழ் பற்களை திறக்க முடியாமல் பூட்டி வைக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவியை வாயில் பொருத்தினால், 6 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே வாயை திறக்க முடியும். இதன்மூலம் தண்ணீர் தவிர அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படும். இதனைப் பயன்படுத்தியவர்கள் இரண்டு வாரங்களில் உடல் எடையை 6 கிலோ வரை குறைத்து உள்ளார்கள் என்று ஆய்வு கூறுகின்றது. இந்த கருவி குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading