வறுமை காரணமாக விஷத்தை குடித்த தாய் மற்றும் 3 குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி!

ஹாலிஎல- வேவல்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர், தனது 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளதுடன், அவரும் விஷமருந்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நால்வரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயது தாயே தனது 6, 4, மற்றும் 3 வயது குழந்தைகளுக்கு விஷத்தை பருக்கியுள்ளார்.
தனது குடும்ப வறுமை காரணமாகவே தனது பிள்ளைகளுக்கு விஷத்தை பருக்கி தானும் பருகியதாக தாய், வைத்தியசாலையில் தெரிவித்தார் என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரதானி பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
