Local

வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு!

உலகின் வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு நகரம் இடம்பெற்றுள்ளது.

Economist Intelligence Unit (EIU) ஆல் நடத்தப்படும் உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, உலகின் மிகக் குறைந்த செலவில் உள்ள நகரங்களில் கொழும்பு இடம் பெற்றுள்ளது.

சமீபத்திய உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, உலகின் செலவு குறைந்த நகரங்களின் முதல் பத்து இடங்களில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.

161 வது தரவரிசையுடன், கொழும்பு இந்தியாவின் பெங்களூருவுடன் இணைந்துள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் சென்னை, அஹமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு மேலே இடம்பெற்றுள்ளது.

உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, டமாஸ்கஸ், திரிபோலி மற்றும் தெஹ்ரான் ஆகியவை மலிவான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது இந்த நாடுகளின் பலவீனமான பொருளாதாரங்கள் மற்றும் நாணயங்களைப் பிரதிபலிக்கிறது.

இதற்கிடையில், நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் உலகின் மிக செலவு கூடிய நகரங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading