விசா கட்டணத்தை 5 மடங்கு உயர்த்திய நாடு
ஜப்பான் அரசு, வெளிநாட்டு பயணிகளுக்கான விசா கட்டணத்தை 50 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ளது.
1978-ஆம் ஆண்டிலிருந்து நிலையானதாக இருந்த கட்டணம், இப்போது 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல், ஒற்றை நுழைவு விசா கட்டணம் 3,000 யென்னிலிருந்து 15,000 யென்னாக உயர்கிறது. பல-நுழைவு விசா கட்டணம் 6,000 யென்னிலிருந்து 30,000 யென்னாக உயர்கிறது.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தொஷிமிட்சு மோதேகி, “1978-இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை, தற்போதைய பணவீக்கம் மற்றும் நாணய மாற்று விகிதங்களை கருத்தில் கொண்டு திருத்தியுள்ளோம். இது உடனடி சுற்றுலா பாதிப்பை ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பான் யென் நாணயம் 2021 முதல் தொடர்ந்து பலவீனமடைந்து, தற்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
அதேசமயம், கொரோனாவிற்குப் பிறகு சுற்றுலா பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 42.7 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு பயணித்துள்ளனர்.
மேலும், நிரந்தர குடியுரிமை விண்ணப்ப கட்டணம் 10,000 யென்னிலிருந்து 300,000 யென்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
குடியுரிமை நிலையை மாற்றுவது அல்லது தங்கும் காலத்தை நீட்டிப்பதற்கான கட்டணமும் 10,000 யென்னிலிருந்து 100,000 யென்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், ஜப்பானின் விசா மற்றும் குடியேற்ற கட்டணங்களை மேற்கு நாடுகளின் (G7) அளவுகளுக்கு இணையாக மாற்றும் முயற்சியாகக் கருதப்படுகின்றன.

You must be logged in to post a comment.