Cinema

விஜய்யுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சங்கீதா அறிவிப்பு..!!

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (7) செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, தமிழக சட்டமன்ற அமர்வு நடைபெற்று வருவதால் விசாரணையை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு விஜய் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. சங்கீதா காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை மீளப் பெற விரும்புவதாகவும், தனது கணவர் விஜய்யுடன் இணைந்து வாழ விருப்பம் உள்ளதாகவும் சங்கீதா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சங்கீதாவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், விவாகரத்து மனுவை மீளப் பெற அனுமதித்து வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading