Local

வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் 21 வயது யுவதி தற்கொலை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று இரவு இரவு இடம்பெற்றுள்ளது.
Brandix நிறுவனத்தில் பணி புரியும் மேகநாதன் ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டாருடன் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாடு காரணமாவே தற்கொலை செய்து கொண்டுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ஜீவிதா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர், சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுவார். இதனால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்திருக்கலாமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading