வெளிநாட்டவர்கள் 4 இலட்சம் பேருக்கு கனடாவில் குடியுரிமை!

2022ல் வெளிநாடுகளைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் கனடாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சரிசெய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
