Local

வெளிநாட்டு ஊடகருக்கு மறியல் – களமிறங்கியது வெளிவிவகார அமைச்சு

இலங்கையில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு – கட்டான – திம்பிரிகஸ்கட்டுவ பகுதியிலுள்ள மாரிஸ் ஸ்டேலா பாடசாலைக்குள் நேற்று பிற்பகல் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நடமாடுவதாக பாடசாலையின் அதிபரினால் கட்டான பொலிஸாருக்கு முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதான சித்திக் அஹமத் தனுஷ்க் என்ற ராய்டர்ஸ் புகைப்பட ஊடகவியலாளர் என போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான போலஜ00ஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஊடகவியலாளர் உரிய ஆவணங்களுடனேயே நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்பாடல் பிரச்சனையே ராய்டர்ஸ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading