வெளிநாட்டு காகங்கள் பேசுமா?
மனிதர்கள் வாழும் இடத்தில் நாம் காகங்களை பார்த்திருப்போம். ஆனால் இவற்றை பெரும்பாலானோர் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில்லை.
மாறாக இது சனிபகவானின் வானகம் என ஜோதிட சாஷ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இதை தெய்வமாக சிலர் பார்க்கின்றனர். ஆனால் வெளிநாட்டு காகங்கள் நம் நாட்டு காகங்களை விட மிகவும் வித்தியாசமானவை.
இந்த காகங்கள் உடல் வடிவிலும் சத்தம் மற்றும் வாழ்க்கை முறையிலும் வேறுபட்டு இருக்கின்றன. அதன் முழு விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

Crow vs Raven என இரண்டு வகையான காகங்கள் உள்ளது. தமிழ் நாட்டில் இந்த காகங்கள் தெய்வமாக பார்க்கப்படுகின்றது. ஆனால் வெளிநாட்டில் இவை வீட்டு செல்லப்பிராணிகளாக பார்க்கப்படுகின்றது.

இந்த காகங்கள் நம் நாட்டு காகங்களை விட மிகவும் பெரிதாக இருக்கும். இரண்டு மடங்கு பெரிய காகங்கள் அவை. அவற்றின் இறக்கையின் அளவு மட்டும் 1.5 மீட்டர் வரை இருக்குமாம்.

ஆனால் வெளிநாட்டு காக்கைகள் ‘குரோங்க் க்ரோங்க்’ எனப்படும் ஆழமான, கடுமையான ஒலியை எழுப்புகின்றன. சில நேரங்களில் இவை மனிதர்களை போல பேசும் என சொல்லப்படுகின்றது.

ஆனால் வெளிநாடு காகங்கள் மனிதர்களுடனே நெருக்கமான உறவை பேணுகின்றன. இங்குள்ள காகங்களின் அலகு சிறியதாகவும், தட்டையாகவும் காணப்படும். ஆனால் அங்குள்ள காகங்களின் அலகு பெரியதாகவும், வளைந்ததாகவும் காணப்படும்.

You must be logged in to post a comment.