Local

வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!

இலங்கை அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

சில வைத்தியசாலைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.

பொதுவாக இந்நாட்டில் நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300 க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றில் 383 வகையான மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகக் கருதப்படுகின்றன.

நாட்டில் தற்போது சுமார் 160 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading