ஷிரந்தி ராஜபக்சவினால் சிக்கலில் பலர்..!
தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சி.டீ Scan இயந்திர கொள்வனவு நிதி முறைகேடு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் மனுவொன்றையும் மேலதிக அறிக்கையொன்றையும் சமர்ப்பித்து நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஷிரந்தி ராஜபக்ச, டி.எஸ்.கே.எஸ். குமாரி மற்றும் கே.எச். நிரோஷா ஆகிய மூவருக்கு எதிராகப் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிவான், விசாரணைகளை நிறைவுசெய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
‘சிரிலிய சவிய’ அமைப்பின் மூலம் ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) இயந்திரம் ஒன்று வழங்கப்படும் எனக் கூறி, அதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து10 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்றுக்கொண்டு, அக் குறிப்பிட்ட இயந்திரத்தை வழங்காமல் அந்த அரசாங்கப் பணத்தைக் குற்றவியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தமை மூலம் ஊழல் புரிந்தமை மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஒக்டோபர் 7 திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.