ஹஜ் யாத்ரீர்களைப் பாதுகாக்க சவுதியில் Cooling Mist தொழிநுட்பம்
ஹஜ் யாத்ரீகர்களைக் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், சவூதி அரேபிய அரசு மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் புனிதத் தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிநவீன ‘கூலிங் மிஸ்ட்’ (Cooling Mist) செயல்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பு ஹஜ் காலத்தில் மக்காவில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 1,55,000 டன் குளிர்ச்சித் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய ஏர்-கண்டிஷனிங் சிஸ்டம் மற்றும் நூற்றுக்கணக்கான நவீன மிஸ்ட் ஃபேன்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவை காற்றில் மிக மெல்லிய நீர்த்துளிகளைத் தெளிப்பதன் மூலம் வெப்பத்தைக் குறைத்து, யாத்ரீகர்களுக்குப் புத்துணர்வை அளிக்கின்றன.
குறிப்பாக ஜமராத் மற்றும் அரஃபாத் பகுதிகளில் 66,000 சதுர மீட்டர் பரப்பளவில் நிழற்குடைகள் மற்றும் நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த புனிதப் பயணத்தில், வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க சவூதி அரசு மேற்கொண்டுள்ள இந்தத் தொழில்நுட்ப முயற்சி சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

You must be logged in to post a comment.