ஹிட்லரின் பாதையில் இஸ்ரேல்…!!!
இன்று மத்திய கிழக்கு பிராந்தியம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பதற்றத்திற்கு, அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்கக் கொள்கைகளே முதன்மைக் காரணமாகும்.
தொடர்ச்சியான போர்கள், இறையாண்மை கொண்ட நாடுகளின் மீதான தாக்குதல்கள் மற்றும் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஆகியவை இப்பிராந்தியத்தை முடிவற்ற மோதலை நோக்கி தள்ளியுள்ளன.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, லெபனானையும் சிதறடித்து, காலப்போக்கில் அதனை “Greater Israel என்ற தங்களின் விரிவாக்கக் கனவுக்குள் உறிஞ்சிக்கொள்ள அது திட்டமிடுகிறது.
இது ஒரு கற்பனைக் கோட்பாடு அல்ல; மாறாக மத்திய கிழக்கின் பெரும்பகுதியை விழுங்க நினைக்கும் ஒரு மிக ஆபத்தான உண்மை.
இந்த ஆக்கிரமிப்பு மனநிலை, ஹிட்லரின் ‘Lebensraum’ (வாழும் இடம்) என்ற நாசிசக் கொள்கையை ஒத்துள்ளது.
ஜெர்மனிய இனத்தின் விரிவாக்கத்திற்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமித்து, அங்கிருந்த பூர்வகுடிகளை ஒடுக்கிய ஹிட்லரின் அதே உத்தியைத்தான் இன்றைய இஸ்ரேலிய வலதுசாரித் தலைமைகளும் கையில் எடுத்துள்ளன.
இஸ்ரேலின் தற்போதைய தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளான Ben-Gvir மற்றும் Smotrich போன்றோரின் பேச்சுகளும், பிரதமர் நெதன்யாகுவின் செயல்பாடுகளும் ஹிட்லரின் அந்தப் பழைய ஆதிக்கவாதக் குரலையே எதிரொலிக்கின்றன.
இவர்கள் பாலஸ்தீனியர்களையும் அரேபியர்களையும் தாழ்ந்தவர்களாகக் கருதி, பைபிளில் வாக்குறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலங்களை ஆக்கிரமிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Greater Israel (Hebrew: Eretz Yisrael HaShlema) என்பது இஸ்ரேலின் தற்போதைய எல்லைகளைத் தாண்டி, மத்திய கிழக்கின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த யூத அரசை உருவாக்குவதைக் குறிக்கும் ஒரு புவிசார் அரசியல் மற்றும் மதக் கோட்பாடாகும்.
பைபிளின் பழைய ஏற்பாட்டில் (Genesis 15:18) கடவுள் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படும் நிலப்பரப்பைக் குறிப்பதாகும்.
இது “எகிப்தின் நதி (நைல்) முதல் யூப்ரடீஸ் நதி வரை” (From the River of Egypt to the Euphrates) உள்ள பகுதிகளை உள்ளடக்கியது தான் இந்த Greater Israel.
நவீன வரலாற்றில், இது ஒட்டுமொத்த வரலாற்று பாலஸ்தீனம் (மேற்குக் கரை மற்றும் காசா உட்பட), லெபனானின் தெற்குப் பகுதி, சிரியாவின் கோலான் குன்றுகள் மற்றும் ஜோர்டானின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் முழுமையாக இணைப்பதைக் குறிக்கிறது.
இக்கோட்பாடு ஏதோ திடீரென உருவானது அல்ல; இதற்கு நீண்ட அரசியல் மற்றும் கருத்தியல் வரலாறு உள்ளது:
1920-1930களில் சீயோனிச இயக்கத்தின் தீவிரப் பிரிவைத் தலைமையேற்று நடத்திய ஜாபோடின்ஸ்கி, ஜோர்டான் நதியின் இருபுறமும் (இன்றைய இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடு முழுவதையும் உள்ளடக்கிய) ஒரு யூத அரசை நிறுவ வேண்டும் என்று வாதிட்டார்.
1967 ஆறு நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேல் மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியபோது, இந்த நிலங்கள் அனைத்தும் யூதர்களுக்குக் கடவுளால் அளிக்கப்பட்ட புனித நிலங்கள் என்றும், இவற்றைத் திரும்ப ஒப்படைப்பது மதத்துரோகம் என்றும் ஒரு தீவிர மதக் குழுவினர் (Gush Emunim) பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
இன்று பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள Ben-Gvir மற்றும் Bezalel Smotrich போன்ற தீவிர வலதுசாரி அமைச்சர்கள் இக்கோட்பாட்டின் நவீன முகங்களாகச் செயல்படுகிறார்கள்.
இந்த greater Israel முதல் கட்ட இலக்கு பாலஸ்தீனர்களுக்கு எனத் தனி நாடு (Two-State Solution) உருவாவதை முற்றிலும் தடுப்பதாகும்.
மேற்குக் கரை (West Bank) மற்றும் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு (Ethnic Cleansing), அந்நிலங்களை இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பது (Annexation) இவர்களின் முக்கிய நோக்கமாகும்.
தற்போதைய லெபனான் மீதான தாக்குதல்களின் பின்னணியில் இத்திட்டம் இருக்கின்றது.
லெபனானை ஒரு பலவீனமான, சிதறிய நாடாக மாற்றி, அதன் தெற்குப் பகுதியைக் கைப்பற்றுவதும், சிரியாவின் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளை இஸ்ரேலின் நிரந்தரப் பகுதியாக மாற்றுவதும் இவர்களின் விரிவாக்கப் பட்டியலில் உள்ளன.
சுருக்கமாக சொன்னால் பாலஸ்தீனம் முழுமை, லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக், எகிப்தின் சில பகுதிகள் மற்றும் சவூதி அரேபியாவின் வடக்கு எல்லைகள் அனைத்தையும் உள்ளடக்கிய தேசமே The Greater Israel .
இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தசாப்தங்களாக சிரியாவின் கோலான் குன்றுகள் (Golan Heights) மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோத யூதக் குடியிருப்புகளை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
லெபனான் மீதான தொடர் ராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பை பலவீனப்படுத்தும் நகர்வுகள், அதன் தெற்குப் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முதற்கட்ட உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்புமே இஸ்ரேலிய ஆதரவு நிதி அமைப்புகளின் (AIPAC – American Israel Public Affairs Committee) பிடியில் உள்ளன.
மிரியம் அடெல்சன் போன்ற கோடீஸ்வரர்கள் அமெரிக்க அதிபர் தேர்தல்களில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து, இஸ்ரேலுக்குச் சாதகமான வெளியுறவுக் கொள்கைகளை (Foreign Policies) வகுக்க வைக்கின்றனர்.
அமெரிக்காவின் நிபந்தனையற்ற ராணுவ மற்றும் நிதி ஆதரவைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கில் தங்களுக்கு சவாலாக இருக்கும் ஈரான் போன்ற நாடுகளை ராணுவ ரீதியாக வீழ்த்துவது மற்றும்
இதன் மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் இஸ்ரேலின் பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தை எதேச்சதிகாரமாக நிலைநிறுத்துவது இவர்களின் இறுதி இலக்காகும்.
எதிர்கால உலகம் என்பது நிலப்பரப்பை விட தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலமே ஆளப்படும்.
இதில் இஸ்ரேல் உலகளவில் முன்னணியில் உள்ளது.
இஸ்ரேலின் ‘Pegasus போன்ற உளவு மென்பொருள்கள் உலக நாடுகளின் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
காசா மற்றும் லெபனான் போர்களில் இஸ்ரேல் பயன்படுத்திய Lavenderமற்றும் தி The Gospel போன்ற AI அமைப்புகள், மனிதர்களின் தலையீடு இன்றி இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் வல்லமை கொண்டவை.
அடுத்த நூறு ஆண்டுகளில் உலக நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேலின் இந்தத் தொழில்நுட்பங்களையே நம்பியிருக்கும் சூழல் உருவாகி வருகிறது.
Greater Israel திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட அரபு நாடுகளின் ஒற்றுமையின்மையும் ஒரு முக்கியக் காரணியாகும்.
பாலஸ்தீனப் பிரச்சினையைக் கைவிட்டு, இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பலத்தைப் பயன்படுத்த அரபு நாடுகள் விரும்புவது, இஸ்ரேல் எந்தவித எதிர்ப்புமின்றி மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கிறது.
தொழில்நுட்ப பலம், உலகளாவிய நிதி ஆதிக்கம் மற்றும் அமெரிக்காவின் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு இஸ்ரேல் அடுத்த நூறு ஆண்டுகளில் உலகை ஆளும் ஒரு வல்லரசாக மாற அனைத்துக் காய்களையும் நகர்த்தி வருகிறது.
ஆனால், அதற்குப் போட்டியாக உருவாகும் ஈரான்-துருக்கி கூட்டணி மற்றும் புதிய உலக நாடுகளின் எழுச்சி மட்டுமே உலகை ஒருதலைப்பட்சமான ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
இல்லாவிடின் நாம் அனைவரும் இஸ்ரேலின் அடிமைகளாக( Gentiles) வாழ நேரிடும்.

You must be logged in to post a comment.