World

12 ஆண்டுகளாக ஒரே நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் மனிதன்!

12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்கும் வினோத இளைஞர் வசிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி (36). இவர் ‘ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோஸியேஷன்’ தலைவராக பதவி வகிக்கிறார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் உறங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார்.

மேலும், துாங்கும் நேரத்தை எப்படி குறைப்பது என்பது குறித்து நுாற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தும் வருகிறாராம். இதுகுறித்து தைசுகே ஹோரி கூறியதாவது,

எல்லாரையும் போல நானும் எட்டு மணி நேரம் தான் துாங்கிக் கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே துாங்கும் நேரத்தை குறைக்க துவங்கினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட துாங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading