Cinema

மேடையில் போட்டியாளரின் கன்னத்தை கடித்த நடிகை!

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும், பூர்ணா கடைசியாக சமீபத்தில் வெளியிலான ‘தலைவி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து, தெலுங்கில் ETV.,யில் ஒளிபரப்பாகும் Dhee Champions ஷோவிலும் நடுவராக இருந்து வருகிறார்.அந்த நிகழ்ச்சியில் செய்த செயல் தான் சமூக வலைத்தளத்தில் கடும் கண்டங்களுக்கு ஆளாகியுள்ளது.

நிகழ்ச்சியின் நன்றாக டான்ஸ் ஆடிய ஒரு இளைஞருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டியது மட்டும் இன்றி அவரது கன்னத்தையும் கடித்தும் உள்ளார்.

சமீப காலமாக இதனை தனது ஸ்டைலாக கடைபிடித்து வருகிறார் பூர்ணா. இந்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் பலரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு நடுவர் செய்கிற வேலையா? என சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading