World

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு!

இந்த நகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு..!
திருவேற்காட்டில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அனைவருக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவேற்காடு நகராட்சியில் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் மிக்சி, கிரைண்டர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், திருவேற்காடு நகராட்சியில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்த வரும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் வசந்தி அறிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் அனைவருக்கும் பரிசு என அறிவிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் குதூகலத்தில் உள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading