15 வயதான சிறுமி விற்பனை விவகாரம் எம்.பிக்கு வலைவீச்சு!

இணையத்தளத்தின் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக, 15 வயதான சிறுமியொருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அச்சிறுமியை கொள்வனவு செய்து, பாலியல் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் கைது செய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்நிலையில், சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட 5,000க்கும் அதிகமானவர்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு இணையத்தளங்களின் ஊடாக, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
