Local

17000 பொருட்களுக்கு vat வரிச்சலுகை

17,000 பொருட்களுக்கு VAT வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வரிச்சலுகையை பொதுமக்களுக்கு வழங்க 85 நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.S.M.பௌசர் குறிப்பிட்டார்.
இதனூடாக வாழ்க்கைச் செலவிற்கு சலுகைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
சில நிறுவனங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்துள்ளமையாலும் சந்தைக்கு விற்பனைக்கு பொருட்களை விநியோகித்துள்ளமையாலும் வரிச்சலுகைகளை அமுல்படுத்த கால அவகாசம் கோரியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.S.M.பௌசர் தெரிவித்தார்.
அவற்றை தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள் வரிச்சலுகைகளை அமுல்படுத்தாத பட்சத்தில் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading