World

2 000 பாலஸ்தீன சிறுவர்களை தடுத்து வைத்துள்ள இஸ்ரேல்…!!!

இஸ்ரேல் படையினர் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன சிறுவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளதாக பாலஸ்தீன சிறைச்சாலை சமூக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பாலஸ்தீன சிறைச்சாலை சமூக அமைப்பு இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் முதல் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

2 000 பாலஸ்தீன சிறுவர்களை தடுத்து வைத்துள்ள இஸ்ரேல் | Israel Is Holding 2 000 Palestinian Children

இந்த விடயம் தொடர்பில் பாலஸ்தீனத்திலுள்ள மனித உரிமை அமைப்புகளும் கருத்து வெளியிட்டுள்ளன. பாலஸ்தீன சிறுவர்களை இலக்கு வைப்பதை இஸ்ரேல் அரச நிர்வாகம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்நிலையில் இஸ்ரேல் சிறைகளில் தடுத்து வைத்துள்ள சிறுவர்களில் சுமார் 350 சிறுவர்கள் மோசமான சூழ்நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை, மேற்கு கரைப் பகுதியில் வைத்து இஸ்ரேல் படையினரால் 6 பாலஸ்தீன சிறுவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading