LocalUp Country

ரயிலிலுடன் மோதி 2 மாணவர்கள் பலி!

நாவலப்பிட்டியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவரும் மாணவியொருவரும் பலியாகியுள்ளனர்.

16 வயதுடைய மாணவனும் 15 வயதுடைய மாணவியுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

இரண்டு மாணவிகளும் மாணவனொருவனும் ரயில்வே தண்டவாளத்தில் நடத்து சென்றபோதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் வருவதைக் கண்ட மாணவன், ஒரு மாணவியை ஒரு பக்கம் தள்ளிவிட்டு, மற்றைய மாணவியைக் காப்பாற்ற முயன்றபோதே, மாணவியுடன் சேர்ந்து ரயிலில் மோதி பலியாகியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

உயிரிழந்த மாணவி, அலைபேசியில் உரையாடிக்கொண்டு நடந்து சென்றுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading