Local

கஞ்சிப்பான இம்ரானின் மற்றுமொரு சகா கைது!

டுபாயில் மாக்கந்துர மதுஷுடன் கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் ஐஸ் போதைப்பொருளும் வாள் ஒன்றும் இருந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நீண்ட காலமாக ஐஸ் வகைப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது எனப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading