2025 SLIM-Kantar விருது விழாவில் பிரகாசித்த Unilever Srilanka
நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யூனிலீவர் ஸ்ரீ லங்கா, SLIM-Kantar People’s Awards 2025 இல் மீண்டுமொரு முறை பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டது. பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவங்கள், யூனிலீவர் வர்த்தகநாமங்கள் மீது இலங்கை நுகர்வோர் வைத்திருக்கும் 87 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையையும் ஆதரவையும் பிரதிபலிக்கின்றன.
இவ்வருட விருதுகளில் சன்லைட் வர்த்தகநாமத்திற்கு ‘Laundry Care Brand of the Year’ விருதும், Vim இற்கு ‘Household Cleaner Brand of the Year’ விருதும், Vaseline இற்கு ‘Skincare Brand of the Year’ விருதும், Sunsilk இற்கு ‘Haircare Brand of the Year’ விருதும் Signal இற்கு ‘Oral Care Brand of the Year’ விருதும் உள்ளடங்குகின்றது.
இது தொடர்பில் நிறுவனத்தின் அழகு மற்றும் சுகவாழ்வு மற்றும் தனிநபர் பராமரிப்பு சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷாமர சில்வா தெரிவிக்கையில், “இலங்கை நுகர்வோருடன் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் வலுவான உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை உருவாக்குவதற்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறுவதற்குமாக நாம் எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துக்காட்டும் இந்த அங்கீகாரம் தொடர்பில் நாம் உண்மையிலேயே பெருமை அடைகிறோம். ‘அனைவரதும் அன்றாட வாழ்க்கையை பிரகாசமாக்குதல்’ எனும் எமது நோக்கத்தால் வழிநடத்தப்பட்டு, மிக உயர்ந்த தரமான தயாரிப்புகளுடன் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை பூர்த்தி செய்வதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.” என்றார்.
நிறுவனத்தின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் போசணைப் பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர், இமேஷிகா காரியவசம் தெரிவிக்கையில், “இது ஒரு நம்பமுடியாத அர்த்தமுள்ள சாதனையாகும். காரணம், இது மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் மையமாக எமது நுகர்வோர் எப்போதும் உள்ளனர். எமது வர்த்தகநாமங்கள் மீதான அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் உறுதி தொடர்பில் நாம் மிகவும் நன்றியுடையவர்களாக உள்ளோம்.” என்றார்.

You must be logged in to post a comment.